Poet of the people
கண்ணதாசன்
Kannadasan
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை“I am eternal, imperishable — in no state is there death for me.” — his own lines

A note from the family
அப்பாவின் நினைவுகள் தினமும் ஒரு முறையேனும் யாரோ ஒருவரால், ஏதோ ஒரு வகையில் மீட்டெடுக்கப்படுகின்றன.
A note from the family
அப்பாவின் நினைவுகள் தினமும் ஒரு முறையேனும் யாரோ ஒருவரால், ஏதோ ஒரு வகையில் மீட்டெடுக்கப்படுகின்றன. அவருடைய அளப்பரிய தமிழ் மொழி ஆளுமை, எளிமையான சொற்களில் அவர் தந்த வலிமையான கருத்துக்கள், வாழ்வின் எல்லா தருணங்களிலும் துணைநிற்கும் அவரது பாடல்கள் என அவரைப் பற்றிப் பேச எப்பொழுதும் ஏதோ ஒன்று இருக்கவே செய்கிறது.
எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்களோ, முற்றிலும் புதியவர்களோ அல்லது சற்றுமுன் சந்தித்தவர்களோ - யாராக இருந்தாலும், அப்பாவைப் பற்றி என்னிடம் பகிர்ந்துகொள்ள அவர்களிடம் ஆயிரம் விஷயங்கள் உள்ளன.
இப்படி ஒவ்வொருவரிடமும் சிதறிக் கிடக்கும் இந்த விலைமதிப்பற்ற நினைவுகள் காலப்போக்கில் மறைந்துவிடக் கூடாது என்று எனக்குத் தோன்றியது.
அதனால் தான், குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்கள் மூலம் இந்த நினைவுகள் அனைத்தையும் ஒன்றிணைத்துப் பாதுகாப்பதற்காகவே இந்தச் செயலியை (Application) நான் உருவாக்க விரும்பினேன்.
Not a single day goes by without someone, in some way, bringing back memories of my father. From his profound mastery of the Tamil language and the powerful thoughts he conveyed through simple words, to his songs that stand by us in every phase of life—there is always something that sparks a conversation about him.
Whether it is an old acquaintance, a complete stranger, or someone I just crossed paths with, everyone has a thousand stories to share with me about him.
I realized that these priceless memories, scattered across so many hearts, should never be lost to time.
That is why I wanted to develop this application to collect and store all these memories through family, friends, fans, and people around the world.
— Venki Kannadasan
Share a memory of him